உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாச்சலேஸ்வரர் கோயில் நூதன கோபுர கும்பாபிஷேக விழா

அருணாச்சலேஸ்வரர் கோயில் நூதன கோபுர கும்பாபிஷேக விழா

வல்லநாடு: கீழ வல்லநாடு மலை அபிதகுஜலாம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர் மற்றும் அருணாச்சலசுவாமியின் நூதன கோபுர அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று 6ம் தேதி நடக்கிறது.வல்லநாடு தாமிரபரணி நதிக்கரையில் கீழவல்லநாடு அருள்தரும் மலையில் விநாயகர், அபிதகுஜலாம்பாள், அருணாச்சலேஸ்வரர் மற்றும் அருணாச்சல சுவாமிக்கு தனித்தனியாக கருங்கற்களால் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. அருணாச்சலசுவாமிக்கு நூதன சிலையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் விமானமும், கருவறை, சிற்ப வடிவங்களும் பல லட்ச ரூபாய் கட்டுமான பணிகளை மற்றும் சிற்ப வேலைபாடுகளை குட்டி என்ற வேதநாயகம் ஸ்தபதி குசூவினர் செய்துள்ளனர்.இக்கோயிலில் கும்பாபிஷேக ஏற்பாடுகளை முன்னிட்டு பிரம்மாண்ட பந்தல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 4ம் தேதி காலையில் கணபதி ஹோமத்துடன் துவங்கியது தொடர்ந்து தேவதா அனுக்கை, வேத பாராயணம், திரவியாகுதி, பூர்ணாகுதி, தீபாரனையும், நவக்கிறஹ ஹோமம், சுதர்சன ஹோமம், அஷ்டலெட்சுமி பூஜை, கோ-பூஜை, பிரம்மச்சாரி பூஜை, பூர்ணாகுதி தீபாரதனை நடந்தது.மாலையில் தீர்த்த சங்கர்ணம், ம்ருத்சங்கர்ணம், அங்குரார்ப்பணம், ரக்ஷபந்தனம், எஜமான் வர்ணம், ஆஜார்யவர்ணம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, கும்ப அலங்காரம், கடஸ்தாபனம், கடம் யாகசாலை பிரவேசம், முதல் கால யாக சாலை பூஜை, பூர்ணாகுதி, வேதாபாராயணம், தீபாரதனை நடந்தது. 5ம் தேதியன்று காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜை, வேதபாராயணம், திரவியாகுதி, பூர்ணாகுதி, தீபாரதனையும், மாலையில் 3ம் கால யாக சாலை பூஜைவேதபாராயணம், திரவியாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை, இரவில் யந்திரஸ்தானம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது.இரவு 8.30 மணிக்கு வாசுகி மனோகரனின் ஆன்மீக சொற்பொழிவு நடந்தது. கும்பாபிஷேகம்கும்பாபிஷேக தினமான இன்று (6ம் தேதி) காலை 4.30 மணிக்கு 4ம் காலயாக சாலை பூஜை, திரவியாகுதி, ஸ்பரஸாகுதி, யாத்ராதானம், வேதபாராயணம், மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடக்கிறது.காலை 6 மணிக்கு கும்பம் எசூந்தருளலும், காலை 7 மணிக்குள் அமிர்தயோகமும், அமிர்தவேளையும் சந்திரஹோரையும் கüடிய நேரத்தில் விநாயகர், அபிதகுஜலாம்பாள், அருணாச்சலேஸ்வரர், அருணாச்சலசுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கும், விமானத்திற்கும் புதிய சிலைக்களுக்கும் வேத மந்திரங்கள், பஞ்சவாத்தியங்கள் முழங்க, ஒதுவார்மூர்த்திகள் பஞ்சபுராணம் பாட விமானத்திற்கு கும்பாபிஷேகம் தவத்திரு சங்கரானந்தா மகராஜ் சுவாமிகள் முன்னிலையில் நடக்கிறது. தொடர்ந்து பகல் 11 மணிக்கு மகா அபிஷேகமும், தீபாரதனையும் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. கும்பாபிஷேகத்தை வல்லநாடு வெங்கிடசுப்பிரமணியன் (எ) ரவிபட்டர் குசூவினர் நடத்தி வைக்கின்றனர். இவ்விழா ஏற்பாடுகளை தர்மகர்த்தா ராமச்சந்திரன் மற்றும் கீழவல்லநாடு, தெய்வச்செயல்புரம் பொதுமக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !