உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / களை கட்டாத குருபூஜை விழா: தண்ணீர் இல்லாததால் ஏமாற்றம்

களை கட்டாத குருபூஜை விழா: தண்ணீர் இல்லாததால் ஏமாற்றம்

துறையூர்: புளியஞ்சோலையில் எப்போதும் இல்லாத வகையில் கடும் வறட்சியால், ஆற்றில் தண்ணீர் இல்லை. இதனால் நேற்று நடந்த குரு பூஜை விழா களைகட்டவில்லையென பங்கேற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். திருச்சி மாவட்டம், துறையூர் அருகே கொல்லிமலை அடிவாரத்தில் உள்ளது புளியஞ்சோலை சுற்றுலாத்தலம். இங்கு ஓடும் ஆற்றில் எப்போதும் தண்ணீர் சலசலத்து ஓடுவதால், இப்பகுதி கோடைகாலத்திலும், குளிர்ச்சியாக இருக்கும். இதற்காக சுற்றுலா பயணிகள் கோடை விடுமுறை மட்டுமல்லாது, பிற நாட்களிலும் இங்கு வந்து மூலிகை கலந்த புளியஞ்சோலை ஆற்று நீரில் குளித்து, உற்சாகத்துடன் செல்வர். புளியஞ்சோலை அருகே உள்ள பெரியசாமி கோவில், புளியஞ்சோலையிலுள்ள குருவாயி அம்மன் கோவில் மற்றும் புளியஞ்சோலை பகுதியில் வாழ்ந்த இரு ஞானியர்களான ஞானநந்தா, குயின்ஸ்பெரி நினைவிடத்தில் மக்கள் வழிபாடு செய்வர். ஒவ்வொராண்டும் மேமாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை ஞானநந்தா, குயின்ஸ்பெரி ஆகியோருக்கு குருபூஜை விழா நடத்தி, அன்னதானம் வழங்கப்படும். நேற்றும் புளியஞ்சோலையில் குருபூஜை விழா நடந்தது. ஆற்றில் தண்ணீர் இல்லாததால், விழா களைகட்டவில்லை. விழாவிற்கு வந்தவர்களும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !