கொளஞ்சியப்பர் இன்று வெள்ளித்தேரில் உலா
ADDED :4576 days ago
விருத்தாசலம்:கிருத்திகையையொட்டி, விருத்தாசலம் கொளஞ்சியப்பர் சுவாமி இன்று வெள்ளித்தேரில் உள்பிரகார வலம் வந்து அருள்பாலிக்கிறார்.விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் சுவாமி கோவிலில், இன்று, 10ம் தேதி கிருத்திகை சிறப்பு வழிபாடு நடக்கிறது. இதையொட்டி, காலை விநாயகர், கொளஞ்சியப்பர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, நடக்கிறது. மாலை 6:00 மணியளவில், அலங்கரித்த வெள்ளித் தேரில் கொளஞ்சியப்பர் சுவாமி உள்பிரகார வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.