உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மந்திரங்களை குருமூலம் உபதேசம் பெற்று ஜெபித்தால் தான் பலன் உண்டா?

மந்திரங்களை குருமூலம் உபதேசம் பெற்று ஜெபித்தால் தான் பலன் உண்டா?

நோய் ஏற்பட்டால் மருத்துவரிடம் சென்று அவர் கொடுக்கும் மருந்துகளைச் சாப்பிட்டு குணப்படுத்திக் கொள்கிறோம். நாமாகவே கடையில் மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டால் பக்கவிளைவுகள் ஏற்பட்டு நோய் இன்னும் அதிகமாகி விடும். அது போலத்தான் மந்திரங்களும், நம்முடைய பக்குவத்திற்கு ஏற்ற மந்திரம் எது, அதை எப்படி உச்சரிக்க வேண்டும் போன்றவை குருமார்களுக்குத்தான் தெரியும். எனவே அவரிடம் உபதேசம் பெற்று அவர் சொல்லிக் கொடுக்கும் முறையில் உச்சரித்து ஜபித்தால் நன்மை உண்டாகும். இல்லாவிட்டால் கடையில் நாமாகவே மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவது போன்று பிரச்னை ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !