உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காற்றினிலே வரும் கீதம்

காற்றினிலே வரும் கீதம்

1932ல், புத்தாண்டு நிகழ்ச்சியாக சென்னை சங்கீத வித்வத்சபையில் அரியக்குடி ராமானுஜ அய்யங்காரின் கச்சேரிக்கு ஏற்பாடு நடந்து கொண்டுஇருந்தது. அவருக்கு உடல்நலம் இல்லாமல் போனதால் வேறு ஒருவரை ஏற்பாடு செய்யும்படி டிசம்பர்31 அன்று தகவல் அனுப்பினார். சபா நிர்வாகிகள் ஆலோசித்து, புதிய இளம்பாடகியான எம்.எஸ்.சுப்புலட்சுமியை அழைப்பது என்று முடிவெடுத்தனர். புத்தாண்டின் மாலை
நேரத்தில் ரசிகர்கள் அரியக்குடியின் இசையை கேட்க கூடினர். ஆனால், மேடையில் இளம்வயதுடைய எம்.எஸ்.சுப்புலட்சுமி சபையை வணங்கி அமர்ந்தார். ஏமாற்றமடைந்த ரசிகர்கள், எம்.எஸ்.,ஸின், காற்றினில் மிதந்த கீதத்தைக் கேட்டதும் பலே! ரொம்ப பிரமாதம்!! என கரகோஷம் எழுப்பினர். இந்த நிகழ்ச்சி அவரது வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !