ஸ்ரீசீனிவாசா, ஸ்ரீபத்மாவதி திருக்கல்யாண உற்சவம்
உடுமலை:உடுமலையில் திருமலாதிருப்பதி தேவஸ்தானம்சார்பில், ஸ்ரீவாரி சீனிவாசாஸ்ரீ பத்மாவதி திருக்கல்யாண உற்சவம் வரும் 27ம் தேதிநடைபெறுகிறது. திருமலா திருப்பதிதேவஸ்தானம் சார்பில்,ஸ்ரீவாரி சீனிவாசா, ஸ்ரீ பத்மாவதி திருக்கல்யாண உற்சவம் பல்வேறு மாவட்டங்களில் நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக வரும் 27ம்தேதி உடுமலை சிவசக்திகாலனியில் உள்ள வரதராஜப்பெருமாள் கோவிலுக்குசொந்தமான இடத்தில்நடைபெறுகிறது. விழாவையொட்டி, அன்று காலை பொன்னேரியில் உள்ள திருமண மண்டபத்தில் பெருமாளுக்கு ஆறுகாலபூஜைகள் மற்றும் திருமண சடங்குகள் நடக்கின்றன.பின், திருமலா திருப்பதி தேவஸ்தானம் சார்பில்உள்ளூரில் உள்ள ஒருகோவிலுக்கு மரியாதைசெய்யப்படும். மாலை 4:00 மணிக்குசீனிவாச பத்மாவதி தாயார்கல்யாண மகாலில் இருந்து ஊர்வலமாக அழைத்துசென்று மாலை 6:00 மணிக்கு மைதானத்தில் உள்ளஅலங்கார மேடையில்திருக்கல்யாண நிகழ்ச்சிநடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை மூகாம்பிகாகல்வி அறக்கட்டளைசெய்து வருகிறது. இத்தகவலை இந்த அறக்கட்டளை நிர்வாக செயலர் குணாலன் தெரிவித்தார்.