திரவுபதி அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
ADDED :4645 days ago
காஞ்சிபுரம்:திரவுபதி அம்மன் கோவிலில், அக்னி வசந்த பெருவிழாவை முன்னிட்டு, பால் குடம் ஊர்வலம் நடந்தது.சின்ன காஞ்சிபுரம், கோகுலம் வீதியில் உள்ள, திரவுபதி அம்மன் கோவிலில், கடந்த 14ம் தேதி, அக்னி வசந்தப் பெருவிழா கோலாகலமாக துவங்கியது. விழாவையொட்டி, நாள்தோறும் பல்வேறு தலைப்புகளில், மகாபாரத சொற்பொழிவு மற்றும் இரவு நாடகம் நடந்தது.நேற்று முன்தினம், காலை 9:30 மணிக்கு, துரியன் படுகளம் நிகழ்ச்சியும், மாலை 5:00 மணிக்கு, தீமிதி திருவிழாவும் நடந்தது. நிறைவு நாளான நேற்று, சின்ன காஞ்சிபுரம், வேலாத்தம்மன் கோவிலில் இருந்து, திரவுபதி அம்மன் கோவில் வரை, 108 பால்குட ஊர்வலம் நடந்தது. பகல் 1:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு, தர்மர் பட்டாபிஷேகமும், இரவு, மலர் அலங்காரத்தில் அம்மன் வீதியுலாவும் நடந்தன.