உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பார்த்தசாரதி பெருமாள் கோவில்சீரமைக்க நடவடிக்கை தேவை

பார்த்தசாரதி பெருமாள் கோவில்சீரமைக்க நடவடிக்கை தேவை

சங்கராபுரம்:சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் கோவில் தற்போது பராமரிப்பின்றி சிதலமடைந்து வருகிறது.சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தில் பார்த்தசாரதி பெருமாள் கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முசுகுந்த சக்கரவர்த்தியால் இக்கோவில் கட்டப்பட்டது. பஞ்சபாண்டவர்களுக்கு அட்சய பாத்திரம் வழங்கிய இடமாகிய தேவபாண்டலத்தில் 2 ஏக்கர் பரப்பில் கட்டப்பட்ட கோவிலில் பெருமாள், தாயார் சிலை உள்ளது. தமிழகத்தில் திருவல்லிக்கேணிக்கு அடுத்து தேவபாண்டலம் பார்த்தசாரதி பெருமாள் கோவில் புகழ்பெற்று விளங்கி வந்தது.போதிய பராமரிப்பு இல்லாமல் தற்போது கோவில் மேல் தளம் மற்றும் சுற்றுச் சுவர்கள் சிதிலமடைந்துள்ளது. இக்கோவிலுக்கு 7 ஏக்கர் நிலம் உள்ளது. இந்து அற நிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் கோவில் நிர்வகிக்கப்படுகிறது. இக்கோவிலுக்கு ராஜகோபுரம் கிடையாது. மிகவும் பழமைவாய்ந்த இக்கோவிலை சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !