உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்ரகாளியம்மன் கோவிலில் வரும் 24ல் குண்டம் விழா

பத்ரகாளியம்மன் கோவிலில் வரும் 24ல் குண்டம் விழா

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு மாமாங்கம் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா வரும் 24ம் தேதி நடக்கிறது.கிணத்துக்கடவு மாமாங்கம் பத்ரகாளியம்மன் கோவில் பழமை வாய்ந்தது. இக்கோவிலில் கடந்த 9ம் தேதியன்று கொடியேற்றுடத்துடன் குண்டம் திருவிழா துவங்கியது.கொடியேற்றியதில் இருந்து 15 நாட்கள் நோன்பு சாட்டப்படுகிறது. வரும் 22ம் தேதி மாவிளக்கும், 23ம் தேதி சக்தி விந்தை அழைத்து வருதலும், 24ம் தேதி காலை 7.00 மணிக்கு குண்டம் விழாவும் நடக்கிறது.இதற்காக, குண்டம் இறங்கும் பக்தர்கள் கொடியேற்றிய நாளில் இருந்து நோன்பு இருந்து, நேர்த்திக்கடன் செலுத்த தயாராகி வருகின்றனர்.இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !