திண்டுக்கல் பிள்ளையார்பாளையம் வரம்சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :4548 days ago
திண்டுக்கல்:திண்டுக்கல் பிள்ளையார்பாளையம் வரம்சித்தி விநாயகர், காளியம்மன் கோயில் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. பூசாரி ராமச்சந்திரன், வீரப்பன் பூஜைகள் செய்தனர். யாக பூஜைகளை அர்ச்சகர் சுந்தரம் செய்தார். மாயத்தேவர், லட்சுமணன், கணேசன், சுப்பாநாயுடு, கன்னியப்பன், மனோகரன், மாரிமுத்து ஏற்பாடுகளை செய்திருந்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.