உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகாசி விசாக விழா துவக்கம்

வைகாசி விசாக விழா துவக்கம்

ராமநாதபுரம்:வெளிப்பட்டிணம் ரெத்தினேஸ்வரர் கோயிலில், வைகாசி வசந்த உற்சவ விழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. மே 25ம் தேதி வரையான விழாவில், தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக மே 21ம் தேதி மாலை 5.50 முதல் 7.50 மணிக்குள் திருக்கல்யாணம், 23ம் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 25ம் தேதி காலை 10.30 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 10 மணிக்கு சுவாமி புஷ்ப பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !