உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகாசி விசாகம்: திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்!

வைகாசி விசாகம்: திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்!

தூத்துக்குடி: திருச்செந்தூரில் வைகாசி விசாக திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. திருவிழாவையொட்டி,  அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பகலில் உச்சி கால தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, மூலவர் சுவாமி ஜெயந்தி நாதர் தங்க சப்பரத்தில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி, முனி குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கவுள்ளது. முருகப்பெருமானின் அவதார திருநாளான வைகாசி விசாக நாளில் அவரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். அவர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் முருகப்பெருமானை தரிசித்து வருகின்றனர். குடும்பத்தோடு கடலில் நீராடி முருகனை தரிசிக்க ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !