புத்துவாய் அம்மன் கோவில் இன்று வைகாசி திருத்தேர்
ADDED :4536 days ago
விழுப்புரம்: கோலியனூர் புத்துவாய் அம்மன் கோவிலில் இன்று வைகாசி திருத்தேர் உற்சவம் நடக்கிறது. கோலியனூர் புத்துவாய் அம்மன் கோவிலில் இன்று(24ம் தேதி) காலை 7 மணிக்கு வைகாசி திருத்தேர் உற்சவம் நடக்கிறது. பின், 8 மணிக்கு புத்துவாய் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடக்கிறது. அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் லட்சுமணன், முன்னாள் அமைச்சர் சண்முகம், ஒன்றிய செயலா ளர் முருகன், சேர்மன் விஜயா சுரேஷ்பாபு, துணை தலைவர் வளர்மதி மணிமாறன், ஊராட்சி தலைவர் திலகம் அன்பழகன், துணை தலைவர் வச்சலா சண்முகம் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். விழா ஏற்பாடுகளை கோலியனூர் பகுதி பொதுமக்கள் செய்து வருகின்றனர்.