உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லாஸ்பேட்டைமுருகன் கோவிலில் லட்சார்ச்சனை விழா

லாஸ்பேட்டைமுருகன் கோவிலில் லட்சார்ச்சனை விழா

புதுச்சேரி: லாஸ்பேட்டை, சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில், ஏகதின லட்சார்ச்சனை விழா நேற்று நடந்தது.வைகாசி விசாகத்தை முன்னிட்டு, சிவசுப்ரமணிய சுவாமிக்கு நேற்று காலை சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, காலை 8.00 மணிக்கு லட்சார்ச்சனை விழா இரவு வரை நடந்தது. ஏராளமான பக்தர்கள் லட்சார்ச்சனையில் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !