உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வத்திராயிருப்பு பகுதியில் வைகாசி விசாக திருவிழா

வத்திராயிருப்பு பகுதியில் வைகாசி விசாக திருவிழா

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு பகுதியில் உள்ள முருகன் கோயில்களில், நேற்று வைகாசி விசாக திருவிழா விமரிசையாக நடந்தது. காசிவிஸ்வநாதர் கோயிலில் உள்ள சுப்பிரமணியசுவாமிக்கு, காலையில் 18 வகையான அபிஷேகம் நடந்தது. பின் புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு, சஷ்டிக்கவச வழிபாடு நடந்தது. எஸ். ராமச்சந்திரபுரம் பழனியாண்டவர் கோயிலில் ,சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். பக்தர்களின் பஜனை வழிபாடும், அன்னதானமும் நடந்தது.நத்தம்பட்டி வழிவிடு முருகன் கோயிலில், சுவாமிக்கு கந்தகுரு கவச பாராயணம், சிறப்பு அபிஷேகம் , அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.சுந்தரபாண்டியம் பாவடித்தோப்பு வடிவேல் முருகன் கோயிலில் நடந்த விழாவில், சுவாமிக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு, சஷ்டிப்பாராயணம், குருகவச வழிபாடு , அன்னதானம் நடந்தது.கூமாப்பட்டி பாலசுப்பிரமணியர் கோயிலில், காலை அபிஷேகம், வள்ளி தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள், பக்தர்களின் சஷ்டிப்பாராயண வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !