குருபெயர்ச்சியை முன்னிட்டு ஆலங்குடி குரு ஸ்தலத்தில் குவிந்த பக்தர்!
ADDED :4553 days ago
நவக்கிரகங்களில் பூர்ண சுபகிரகமான குரு, (மே 28) இரவு 9.03க்கு ரிஷபராசியிலிருந்து மிதுனத்திற்குப் பெயர்ச்சியாகிறார். ஓராண்டு காலம் ஒரு ராசியில் தங்கும் இவர், 2014 ஜுன்12 வரை மிதுனத்தில் சஞ்சரிக்கிறார். இக்குருபெயர்ச்சியை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில் (குரு பரிகார ஸ்தலம்) த்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் குருபகவானுக்கு பஞ்சமுக தீபாரதணை காண்பிக்கப்பட்டது. குருபகவானை தரிசிக்க கோவிலின் உள் பிரகாரத்தில் நீண்ட வரிசையில் ஏராளமான பக்தர்கள் காத்திருந்தனர். குருபகவான் தங்க கவசத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.