பிரத்தியங்கிரா கோவிலில் அபிஷேக பெருவிழா
ADDED :4550 days ago
புதுச்சேரி: மொரட்டாண்டி மகா பிரத்தியங்கிரா காளி கோவிலில், அபிஷேக பெரு விழா நடந்தது.உலக நலனை முன்னிட்டும், அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி வேண்டியும், 24 மணி நேர இடைவிடாத அபிஷேக பெருவிழா நடந்தது. மகா அபிஷேகம் நேற்று காலை 6:00 மணிக்கு துவங்கியது.பல்வேறு திரவியங்களால் சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பிரத்தியங்கிரா காளிக்கு நாணயங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு நாணயங்கள் வழங்கப்பட்டது. மூலிகைகளால் கஷாயம் தயாரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. அபிஷேக பெருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ஜனார்த்தன சுவாமிகள் செய்திருந்தார். நேற்று காலை துவங்கிய அபிஷேகம் இன்று (29ம் தேதி) காலை 6:00 வரை நடக்கிறது.