கற்குவேல் அய்யனார்கோயிலில் இன்று கும்பாபிஷேகம்
ADDED :4521 days ago
பாவூர்சத்திரம்: குருசாமிபுரம் கற்குவேல் அய்யனார் சாஸ்தா கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று (3ம்தேதி) நடக்கிறது. குருசாமிபுரம் கற்குவேல் அய்யனார் சாஸ்தா கோயிலில் இன்று (3ம்தேதி) அதிகாலை 4.30 மணி முதல் கணபதி பூஜை, வேதிகா பூஜை, சாஸ்தா மற்றும் பரிவார தேவதைகள் மூலமந்திர ஜெபம், ஹோமம், 6 மணிக்கு கோபூஜை, ஸ்பரிசாகுதி, திரவியாகுதி நடக்கிறது.காலை 6.40 மணிக்கு பூர்ணபுஷ்கலா சமேத கற்குவேல் அய்யனார் மற்றும் பரிவார தேவதைகளுக்கு ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.தொடர்ந்து 8 மணிக்கு மகா அபிஷேகம்,தீபாராதனை நடக்கிறது. கும்பாபிஷேகத்தை ஆய்க்குடி கிருஷ்ணமூர்த்தி, பாலசுப்பிரமணியன் ஆகியோர் நடத்துகின்றனர். ஏற்பாடுகளை குருசாமிபுரம் ஊர்பொதுமக்கள் செய்துள்ளனர்.