உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பைரவர் கோவிலில் திருக்கல்யாணம்!

பைரவர் கோவிலில் திருக்கல்யாணம்!

வேதாரண்யம்: மஹாகால பைரவர் ஸ்வாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். வேதாரண்யம் அடுத்த கத்திரிப்புலத்தில் உள்ள மஹாகால பைரவர் ஸ்வாமி கோவிலில் திருக்கல்யாண உற்ஸவ விழா, பால்குடம் எடுத்தல், சிறப்பு அபிஷேக, பூஜையுடன் வெகுவிமரிசையாக நடந்தது. இதனையொட்டி கடந்த மாதம், 22ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கி, 10 நாட்களாக பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடத்தப்பட்டது.விழா முடிவில் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் கால பைரவருக்கு சிறப்பு யாக பூஜையும், செல்வசித்தி விநாயகர் கோவிலிருந்து பால்குடம் எடுத்து, பக்தர்கள் ஊர்வலமாக வந்து, பைரவருக்கு பாலபிஷேகம், சங்காபிஷேகம் நடத்தினர். தொடர்ந்து மாலை, 6 மணிக்கு பைரவர், பைரவிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, வழிபட்டனர். ஏற்பாட்டை கோவில் அறங்காவலர்கள், கிராம மக்கள், உபயதாரர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !