தூங்கும் சிங்கம்!
                              ADDED :4531 days ago 
                            
                          
                          நரசிம்மர் தனித்து யோகநிலையிலும், தாயாரை மடியில் அமர்த்தி லட்சுமி நரசிம்மராகவும் இருப்பது வழக்கம். திருவதிகை சரநாராயண பெருமாள் கோயிலில் தெற்கு நோக்கி சயனம் செய்த கோலத்தில் நரசிம்மர் காட்சியளிப்பது வேறெங்கும் இல்லாத சிறப்பு. வக்கிராசூரன் என்னும் அசுரனை அழித்த, நரசிம்மர் இங்கு ஓய்வெடுத்துக் கொண்டதாக தலபுராணம் கூறுகிறது. சயனத்தில் இருக்கும் இவருடன் தாயாரும் காட்சியளிப்பதால் இவர், யோக சயன நரசிம்மர் என அழைக்கப்படுகிறார். பிரதோஷ வேளையில் சயன நரசிம்மருக்கு அபிஷேக ஆராதனை சிறப்பாக நடக்கும். மனஅமைதிக்காக நரசிம்மர் இங்கு சயனகோலத்தில் இருப்பதால், இங்கு தரிசித்தவருக்கு மன அமைதி உண்டாகும். பண்ருட்டியிலிருந்து கடலூர் செல்லும் வழியில் 3 கி.மீ., தொலைவில் திருவதிகை சரநாராயண பெருமாள் கோயில் உள்ளது.