சிலம்புடன் கண்ணகி!
                              ADDED :4531 days ago 
                            
                          
                          பழமை மிக்க காப்பியம் சிலப்பதிகாரம். காப்பியத் தலைவியான கண்ணகி பத்தினித் தெய்வமாக போற்றப்படுகிறாள். கோவலன் வெட்டப்பட்ட செய்தியை அறிந்த கண்ணகி, தன்னிடமிருந்த சிலம்பை எடுத்துக் கொண்டு பாண்டிய நெடுஞ்செழியனிடம் நீதி கேட்க அரண்மனை நோக்கி வந்தாள். அந்த ஒற்றைச் சிலம்பை ஏந்திய கோலத்தில் கண்ணகி இருக்கும் கோயில் மதுரை சிம்மக்கல்லில் உள்ளது. செல்லத்தம்மன் கோயில் என அழைக்கப்படும் இங்கு மூலவராக கண்ணகி விளங்குகிறாள். இவளுக்கு அடைக்கலம் கொடுத்த மாதரிக்கும் சந்நிதி இருக்கிறது.