காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் வசந்த உற்சவம் கோலாகலம்!
ADDED :4617 days ago
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில், வசந்த உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் வசந்த காலத்தில், ஏழு நாட்கள் வசந்த உற்சவம் நடைபெறும். நடப்பாண்டு வசந்த உற்சவம், கடந்த 6ம் தேதி துவங்கியது. 5ம் நாள் உற்சவமான நேற்று முன் தினம் மாலை 6:30 மணிக்கு, வரதராஜ பெருமாள் அத்திவரதர் எழுந்தருளும் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். பின், மாட வீதிகளை வலம் வந்து, மீண்டும் கோவிலை அடைந்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, பெருமாளை வழிபட்டனர்.