உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

காரிமங்கலம்: காரிமங்கலம் அடுத்த கயிறுகாரன்கொட்டாயில் புதிதாக கட்டப்பட்ட செல்வகணபதி ஸ்ரீ ஜடை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை (ஜூன் 12) நடக்கிறது. இதையொட்டி, இன்று (ஜூன் 11) மாலை 5.30 மணிக்கு விக்னேஸ்வரர் பூஜை, வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம், பூர்ணாஹூதி, முதல் கால யாகபூஜையும், இரவு, 10 மணிக்கு கோபுர கலசம் வைத்தல், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடக்கிறது. நாளை, 12ம் தேதி அதிகாலை, 4.30 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜையும், மஹா பூர்ணாஹூதி, மஹா தீபாராதனையும், காலை, 6 மணிக்கு மேல், 7.30 மணிக்குள் செல்வகணபதி ஜடை மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவுக்கு, மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., அன்பழகன் தலைமை வகிக்கிறார். திருப்பூர் திருமலைநகர் மருதாசலசிவம், ராதாகிருஷ்ண ஐயங்கார் ஆகியோர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கின்றனர்.பகல், 8 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானமும் நடக்கிறது. ஏற்பாடுகளை முன்னாள் சேர்மன் மாணிக்கம், வெங்கடாசலம், காந்தன், விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !