கோவில்களுக்கு நிதியுதவி!
ADDED :4535 days ago
புதுச்சேரி:முதலியார்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோவில்களில் ஒரு கால பூஜை நடத்த 1.84 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது.முதலியார்பேட்டை தொகுதிக்குட்பட்ட ஆதிபராசக்தி, வேம்படியம்மன், சக்திவேல் பிரேமானந்தா சாமிகள் சீடர் பீடம், பவானி அம்மன், ராஜராஜேஸ்வரி, ஊத்துக்காட்டம்மன், வலம்புரி விநாயகர், செல்வ விநாயகர், தேவி கருமாரியம்மன் ஆகிய 9 கோவில்களில் ஒரு கால பூஜை நடத்த, 1.84 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, இந்து அறநிலையத் துறை மூலம் பாஸ்கர் எம்.எல்.ஏ., வழங்கினார்.நிகழ்ச்சியில் 9 கோவில் நிர்வாகிகள், முன்னாள் கவுன்சிலர் சத்தியராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.