உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில்பிரம்மோற்சவம் நாளை துவக்கம்!

பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில்பிரம்மோற்சவம் நாளை துவக்கம்!

பாகூர்:பாகூர் மூலநாதர் சுவாமி கோவில் பிரம்மோற்சவ விழா நாளை (13ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது.பாகூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, வேதாம் பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் பிரம்மோற்சவ விழா நாளை (13ம் தேதி) காலை 8.00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.அதையொட்டி, இன்று (12ம் தேதி) மாலை 6.00 மணிக்கு கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, பிடாரி அம்மன் குதிரை வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. விழா நாட்களில் தினமும் சுவாமி வீதியுலா நடக்கிறது. வரும் 19ம் தேதி மாலை 6.00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 21ம் தேதி காலை 8.45 மணிக்கு தேர் திருவிழா நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி பிரபாகரன், நிர்வாக அதிகாரி பாலமுருகன், அர்ச்சகர்கள் சங்கரநாராயணன், பாபு மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !