உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புரி ஜெகந்நாதர் கோவில் நிலம் 26 ஆயிரம் ஏக்கர் ஆக்கிரமிப்பு!

புரி ஜெகந்நாதர் கோவில் நிலம் 26 ஆயிரம் ஏக்கர் ஆக்கிரமிப்பு!

கட்டாக்: ஒடிசா மாநிலம், புரி ஜெகந்நாதர் கோவிலுக்கு, சொந்தமான, 26 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஏராளமானோர் ஆக்கிரமித்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.மாநிலம் முழுவதும்...ஒடிசா மாநிலம் புரியில், உலகப்புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான நிலம், மாநிலம் முழுவதும் பலஇடங்களில், உள்ளது.கோவிலுக்கு சொந்தமான, 26 ஆயிரம் ஏக்கர் நிலத்தை, சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமித்து, எவ்வித கட்டணமும் செலுத்தாமல் பலர்அனுபவித்து வருகின்றனர். ஆக்கிரமிப்பாளர்களின் கையில் சிக்கியுள்ள நிலத்தை மீட்குமாறு, மாவட்ட கலெக்டர்களை, புரி ஜெகந்நாதர் கோவில் முதன்மை நிர்வாகி கேட்டு கொண்டார்.

கருத்தரங்கம்: இந்நிலையில், கட்டாக்கில், நேற்று தேசிய மின் ஆளுமை (இ-கவர்னன்ஸ்) குறித்த கருத்தரங்கம் நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்றனர். இதில், வருவாய்வட்டார கமிஷனரும், புரி ஜெகந்நாதர் கோவில் முதன்மை அதிகாரியுமான அரவிந்த் பத்கீ பேசினார்.அவர், கூறியதாவது:கோவிலுக்கு சொந்தமான, 26 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலம், ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. தங்கள் பகுதியில் உள்ள கோவில் நிலத்தை கண்டுபிடித்து, மீட்க மாவட்ட கலெக்டர்கள் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.மீட்கப்படும் நிலங்கள் விரைவில், ஏலம்மூலம், குத்தகை விடநடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !