உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி அந்தோணியார் கோவிலில் ஆடம்பர தேர்பவனி!

புதுச்சேரி அந்தோணியார் கோவிலில் ஆடம்பர தேர்பவனி!

புதுச்சேரி: ஆட்டுப்பட்டி அந்தோணியார் கோவில் ஆண்டு பெருவிழாவில், ஆடம்பர தேர்பவனி நேற்று இரவு நடந்தது. புதுச்சேரி ஆட்டுப்பட்டி அந்தோணியார் கோவிலின், ஆண்டு பெருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை 6.30 மணிக்கு ஆரோக்கியசாமி தலைமையில் திருப்பலி நடந்தது. புதுச்சேரி-கடலூர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் நேற்று மாலை 6.00 மணிக்கு ஆடம்பர தேர்பவனி நடந்தது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர்பவனியில், நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !