உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!

ராமேஸ்வரம் பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் தீர்த்தமாடும், பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என யாத்திரை பணியாளர் சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றினர்.ராமேஸ்வரம், அகில இந்திய யாத்திரை பணியாளர் சங்க நிர்வாக குழு கூட்டம் தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடந்தது. இதில், உறுப்பினர்கள் கண்டிப்பாக அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும். பக்தருக்கு சேவை செய்யும்போது, உறுப்பினர்கள் ஒழுக்கமாகவும், வெள்ளை சட்டை, வேட்டி அணிந்திருக்க வேண்டும். தீர்த்தமாடும் பக்தர்களிடம், அரசு நிர்ணயித்த கட்டணம் 25 ரூபாய் மட்டுமே, வாங்க வேண்டும். நமது சேவையை பாராட்டி, பக்தர் கொடுக்கும் நன்கொடை பெற்று கொள்ளலாம். மீறி கூடுதல் கட்டணம் வாங்கினால், சங்கம் சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சங்க உறுப்பினர்களின் குழந்தைகள் ராமேஸ்வரம் அரசு பள்ளியில் 10, பிளஸ் 2 வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மூன்றுபேருக்கு ஊக்க தொகை வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !