உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி நாராயண சுவாமி கோவிலில் வரும் 19ல் ஆனி பிரம்மோற்சவம்

லட்சுமி நாராயண சுவாமி கோவிலில் வரும் 19ல் ஆனி பிரம்மோற்சவம்

வங்கனூர்: லட்சுமி நாராயண சுவாமி கோவிலில், வரும், 19ம் தேதி, ஆனி பிரம்மோற்சவம் துவங்குகிறது. 26ம் தேதி வரை நடக்கும் விழாவில், சுவாமி தினசரி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆர்.கே.பேட்டை அடுத்து உள்ளது வங்கனூர். நரேந்திர ராஜ வைகுண்டம் எனவும் அழைக்கப்படுகிறது. இங்கு திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலின், உபகோவிலான கனகவள்ளி நாயகி உடனுறை லட்சுமி நாராயண சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இரண்டாம் ஆண்டு ஆனி மாத பிரம்மோற்சவம் வரும், 19ம் தேதி துவங்குகிறது. 26ம் தேதி வரை விழா நடைபெறும். தினசரி காலை, மாலை சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் நடைபெறுகிறது.

நிகழ்ச்சி நிரல்
தேதி கிழமை காலை மாலை
19 புதன் திருமஞ்சனம் அங்குரார்ப்பணம்
20 வியாழன் கொடியேற்றுதல் சந்திர பிரபை
21 வெள்ளி பலிஹரணம் அனுமந்த வாகனம்
22 சனி நித்திய ஹோமம் சேஷ வாகனம்
23 ஞாயிறு நித்திய ஹோமம் கருட வாகனம்
24 திங்கள் நித்திய ஹோமம் யானை வாகனம்
25 செவ்வாய் நித்திய ஹோமம் குதிரை வாகனம்
26 புதன் பலிஹரணம் துவஜஅவரோகணம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !