கோதண்டராமர் கோயிலில் விபீஷணருக்கு பட்டாபிஷேகம்!
ராமேஸ்வரம்: தனுஷ்கோடி அருகே, கோதண்டராமர் கோவிலில், இலங்கை மன்னராக, ராவணன் தம்பி விபீஷணருக்கு, பட்டாபிஷேகம் சூட்டும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. ராமாயணத்தில், ராவணன் சிறைபிடித்த சீதையை மீட்க, ராமர், தனுஷ்கோடியில், லட்சுமணர், அனுமான் மற்றும் வானர சேனைகளுடன், ஆலோசனை நடத்தினார். அப்போது, சீதையை விடுவிக்கும்படி, கூறிய வீபிஷணரை, ராவணன் அவமானபடுத்தினார். விபீஷணர், சிலருடன் வான்வழியாக, தனுஷ்கோடி வந்தனர். உளவு பார்க்க விபீஷணர் வந்ததாக, அனுமான் கூறினார். உடனே, "உதவி கேட்டு வருவோருக்கு, அடைக்கலம் கொடுப்பது தான், தர்மம் என, கூறிய ராமபிரான், தம்பி லட்சுமணனிடம், கடல் நீரை எடுத்து வரசொல்லி, இலங்கை மன்னராக விபீஷணரை அறிவித்து, புனித நீரை ஊற்றி, பட்டாபிஷேகம் செய்து வைத்தார். இதை நினைவு கூறும் விதமாக, தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோவிலில், விபீஷணருக்கு பட்டாபிஷேகம் சூட்டும் நிகழ்ச்சி நடந்தது.