உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பொலிவிழந்த நூறு கால் மண்டபம்!

ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பொலிவிழந்த நூறு கால் மண்டபம்!

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப்பெருமாள் மற்றும் ராமானுஜர் கோவிலில், நூறு கால் மண்டபத்தை, சீரமைக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூரில், ஆதிகேசவப்பெருமாள் மற்றும் ராமானுஜர் கோவில் உள்ளது. இங்கு, ராமானுஜர் அவதரித்த திருத்தலமாகும். இக்கோவில் அருகே, ராமானுஜர் நூறு கால் மண்டபம் கட்டப்பட்டது. பிரம்மோற்சவத்தின் போது, இம்மண்டபத்தில் இருந்து தான், சுவாமி பல்வேறு வாகனங்களில் அலங்கரிக்கப்பட்டு, புறப்பாடு நடைபெறும். மேலும், சுவாமி வாகனங்கள் இங்கு வைக்கப்பட்டு, பராமரிக்கப்படுகின்றன. வரலாற்று புகழ் பெற்ற நூறு கால் மண்டபம் முழுவதும் சிற்பங்கள் சொதுக்கப்பட்டுள்ளன. தற்போது, இந்த மண்டபம் பராமரிக்கப்படாமல் உள்ளதால், பொலிவிழந்து விட்டது. சீர்குலைந்து வரும் சிற்பங்களை சீரமைக்க, கோவில் நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கோவில் மண்டபத்தை சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன் வரவேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !