உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிந்தவாடி அகரம் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

கோவிந்தவாடி அகரம் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம்: கோவிந்தவாடி அகரம் கோவில் கும்பாபிஷேகம், இன்று நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் உள்ள கோவிந்தவாடி அகரம் கிராமத்தில், மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், கிராம மக்களின் பங்களிப்புடன் புதிதாக கட்டப்பட்டு உள்ளது. திருப்பணிகள் நிறைவடைந்து, கும்பாபிஷேகம், இன்று காலை, 10:00 மணி முதல், 11:00 மணிக்குள் நடைபெற உள்ளது. மாலை, கலை நிகழ்ச்சியும், இரவு, நாடகமும் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !