செல்வவிநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்
செஞ்சி: செஞ்சி சக்கராபுரம் செல்வவிநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. செஞ்சி சக்கராபுரம் திண்டிவனம் சாலையில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 17ம் தேதி மாலை திருமுறை பாராயனம் கணபதி ஹோமத்துடன் முதல் கால யாகசாலை பூஜைகள் துவங்கின.நேற்று முன்தினம் இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும், மூன்றாம் கால யாகசாலை பூஜைகளும் நடந்தன.நேற்று காலை 6 மணிக்கு வேதபாராயணமும், திருமுறை பாராயணனம் மற்றும் விசேஷ பூஜைகள் செய்தனர். 6.30 மணிக்கு கணபதி பூஜையும், நான்காம் கால யாகசாலை பூஜைகளும் நடந்தன. 9.30 மணிக்கு அருளானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் முன்னிலையில் கடம் புறப்பாடு நடந்தது.9.45 மணிக்கு விமான மகா கும்பாபிஷேகமும், 10 மணிக்கு மூலவர் மகா கும்பாபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது. பகல் 12 மணிக்கு மகா அலங்காரத்தில் செல்வவிநாயகர் அருள்பாலித்தார்.