உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லையப்பர் கோயிலில் 509 வது தேரோட்டம்

நெல்லையப்பர் கோயிலில் 509 வது தேரோட்டம்

திருநெல்வேலி : நெல்லையப்பர் கோயில் ஆனித்தேரோட்டம், ஜூன், 22 காலை நடைபெற்றது. நெல்லையப்பர் கோயில், 509 வது ஆனித்தேரோட்டம், ஜூன் 14 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடத்தப்பட்டது. ஜூன், 22 காலை 7.45 முதல் 8.30 மணிக்குள் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. முன்னதாக அதிகாலையில் விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வர் தேர்கள் இழுக்கப்பட்டது. அதன்பின், நெல்லையப்பர் சுவாமி தேரும், பின்னர் காந்திமதியம்மன் தேரும் இழுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !