காரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலம்!
ADDED :4489 days ago
காரைக்கால்: காரைக்கால் அம்மையார் கோவிலில், மாங்கனி திருவிழா, கோலாகலமாக நேற்று நடந்தது. காரைக்காலில், மாங்கனி திருவிழா, கடந்த, 21ம் தேதி துவங்கியது. அன்று மாலை, பரமதத்தர் மாப்பிள்ளை ஊர்வலம், நேற்று முன்தினம், காரைக்கால் அம்மையார் - பரமதத்தர் திருக்கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. மாங்கனி திருவிழா நேற்று நடந்தது. அதிகாலை, பிச்சாடணமூர்த்தி மற்றும் பஞ்சமூர்த்திக்கு மகா அபிஷேகம் நடந்தது. காலை, 9:30 மணிக்கு, பவழக்கால் விமானத்தில், சிவபெருமான் காவியுடை, ருத்ராட்சம் தாங்கி, பிச்சாண்டவர் மூர்த்தியாக வீதி உலா வந்தார். பக்தர்கள், மாங்கனியை அர்ச்சனை செய்து, வீட்டு மாடியிலிருந்து, மாங்கனிகளை வீசினர். விழாவில். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, மாங்கனிகளை பெற்றனர்.