கல்யாண வெங்கடரமண கோவிலில் மழை வேண்டி யாகம்
ADDED :4493 days ago
கரூர்: கரூர் அருகே தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண கோவிலில் மழை வேண்டி, நாளை யாகம் நடக்கிறது. நல்ல பருவமழை பெய்து, நாடு செழிக்க வேண்டி கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண கோவிலில், நாளை யாகம் நடக்கிறது. இதில், காலை, 7 மணி முதல் 9 மணி வரை பகவத் பிரார்த்தனை, புண்யாகம், சங்கல்பம், கடஸ்தாபனம், வருண மந்திரம் ஜபம், ஹோமங்கள் நடக்கிறது. அதை தொடர்ந்து காலை, 9.15 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், திருவாராதனை, சஹஸ்ரநாம பாராயணம் நடைபெறும். பின், நாதஸ்வரகுழுவினரைக் கொண்டு அமிர்தவர்ஷினி, மேகவர்ஷினி, கேதாரி ஆனந்தபைரவி, ரூபகல்யாணி போன்ற ராகங்களைக் கொண்டு வழிபாடு செய்யப்படும். யாகத்துக்கான ஏற்ப்பாடுகளை இந்து அறநிலை துறையினர் செய்து வருகின்றனர்.