பிரணவம் என்றால் என்ன?
ADDED :4523 days ago
பிரணவம் என்றால் என்றும் புதியது, அறிந்து கொள்ள முடியாதது என்றெல்லாம் பொருள் கொள்ளலாம். அறிந்து கொள்ள முடியாதது எது என்றால் இறைவன் தான். அந்த இறைவனைப் பற்றி எவ்வளவுதான் ஆராய்ச்சி செய்தாலும், ஒவ்வொரு நாளும் புதுப்புது கருத்துகள் தான் தோன்றுகிறது. இதனால் தான் ஓம் என்பதை பிரணவம் என்றனர். ஓம் என்றால் எல்லாம் நானே என்று இறைவன் தன்னைப் பற்றிச்சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம். அதனால் தான் அவரவருக்கு விருப்பமான கடவுளின் பெயரின் முன்னால், ஓம் என்பதைச் சேர்த்து, ஓம் சரவணபவ ஓம் நமசிவாய, ஓம் சக்தி, ஓம் நமோ நாராயணாய என்றெல்லாம் சொல்கிறோம். ஓம் சக்தியே போற்றி என்றால், என்றும் புதியவளான சக்திதேவியை போற்றுகிறேன் என்று பொருள் கொள்ள வேண்டும்.