சரவணன் பொருள் விளக்கம்
ADDED :4522 days ago
முருகன் சரவனத்தில் பிறந்தவன். இதை சரம்+வனம் என்று பிரிப்பர். சரம் என்றால் நாணல். வனம் என்றால் காடு. சமஸ்கிருதத்தில் ர வுக்கு பிறகு வரும் ன என்ற எழுத்து ண என்று மாறும். எனவே, முருகப்பெருமான் சரவணபவன் ஆனார். கங்கைக்கரையில் இருந்த சரவணப்பொய்கையில் தோன்றியவர் என்பதாலும் இவர் சரவணன் ஆகிறார். சரவணபவ என்பது முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரம். இதை தினமும் உச்சரிப்பதன் மூலம் நினைத்ததெல்லாம் நடக்கும் என்பர். இந்த மந்திரத்தின் முன்னால் ஓம் சேர்த்து, ஓம் சரவணபவ அல்லது ஓம் குஹாய நம:என்று உச்சரிக்க விரும்புவோர், ஒரு குருவின் மூலம் உபதேசமாகப் பெற்று சொல்ல வேண்டும். தமிழில் மந்திரம் உச்சரிக்க விரும்புவோர் முருகா என்று சொன்னாலே, அருள்பாலிக்க ஓடிவருவான் தமிழ் முருகன்.