வீட்டில் சுந்தரகாண்டம் படிப்பது நல்லதா?
ADDED :4521 days ago
சீதையின் உயிர் பிரிய இருந்த நிலையில், விரைவில் ராமன் இலங்கை வரவிருப்பதை அனுமன் அவளுக்கு தெரிவித்து உயிர் காத்தான். கண்டனன் கற்பினுக்கு அணியை கண்களால் என்ற இனிய செய்தியை ராமனுக்குத் தெரிவித்து சீதையைப் பிரிந்த ராமனின் உயிரையும் காத்தான். இருவருக்கும் வாழ்வில் நம்பிக்கையை ஏற்படுத்திய இந்தப் பகுதியே ராமாயணத்தின் சுந்தரகாண்டம். வாழ்வில் துயர் நீங்க, தன்னம்பிக்கை வளர அனுமனின் திருவடிகளைச் சரணடைந்து சுந்தரகாண்டத்தை பாராயணம் செய்வதை காலம் காலமாகப் பெரியவர்கள் பின்பற்றி வந்திருக்கிறார்கள். படித்தால் பலன் கிடைப்பது நிச்சயம்.