மீனாட்சி அம்மன் கோயில் கொடிமரம் கும்பாபிஷேம்!
ADDED :4518 days ago
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுவாமி சன்னதி கம்பத்தடி மண்டபத்தில் அமைந்துள்ள சுவாமி கொடிமரம் 150 ஆண்டு பழமையானது. அது பழுதுபட்டதால் பழைய கொடிமரத்தினை அகற்றி விட்டு, புதியதாக 56 அடி உயரமுள்ள கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கொடிமரத்தில் தாமிரத் தகட்டின் மேல், 11 கிலோ தங்கத்தை பயன்படுத்தி, "தங்கரேக் பொருத்தும் பணி நடக்கிறது. இப்புதிய கொடிமரத்திற்கு ஜூலை 10ல், காலை 6 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது, என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.