உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒத்தாண்டேஸ்வரர் கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாகம்!

ஒத்தாண்டேஸ்வரர் கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாகம்!

திருவள்ளூர்: மழை வேண்டி ஒத்தாண்டேஸ்வரர் கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது. மழை பெய்ய வேண்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் யாகங்கள் செய்ய வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிணங்க, திருவள்ளூர் அடுத்த, திருமழிசையில் உள்ள குளிர்ந்தநாயகி உடனுறை ஒத்தாண்டேஸ்வரர் கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. காலை, 7:00 மணிக்கு விநாயகர் பூஜை நடைபெற்றது. 7:15 மணிக்கு சங்கல்பமும், 7:29 மணிக்கு விசேஷ பூஜைகள், வேள்வி வழிபாடு நடைபெற்றது. இதில், மழை வேண்டி சூக்த ஜப பாராயணம், திருமுறை பாராயணம் மற்றும் நாதஸ்வர இசை வழிபாடு நடைபெற்றது. பகல், 12:05 மணிக்கு ஒத்தாண்டேஸ்வரர், குளிர்ந்த நாயகி அம்மனுக்கு ருத்ர சமக பாராயணத்துடன் மகா அபிஷேகம் நடைபெற்றது. பகல், 12:45 மணிக்கு மகா பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது. மேலும், திருக்கல்யாண மண்டபத்தில் சந்திரசேகரர் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு வழிபாடு, தீபாராதனை மற்றும் யாக பூஜைகள் நடத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !