உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் மழைவேண்டி வருண வேள்வி

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் மழைவேண்டி வருண வேள்வி

பேரூர்: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், மழைவேண்டி வருணஜெப வேள்வி நேற்று நடந்தது. நேற்று காலை 7.00 மணிக்கு விக்னேஷ்வர பூஜையுடன் வேள்வி துவங்கியது. தொடர்ந்து, புண்யாகவாசனம், செய்து பஞ்சகவ்யம் பூஜை முடித்து, நந்தி பெருமானுக்கு நிரந்தரமாக இருக்கும் தொட்டியில் வாசனை மலர்கள், வெட்டிவேர், பச்சைகற்பூரம், குங்குமப்பூ கலந்த தண்ணீர் நிரப்பி ஐந்து உபசார பூஜைகள், தீபாராதனை செய்யப்பட்டது. பின், 9.30 மணிக்கு திருக்கோவில் ஞானமூர்த்தி ஓதுவார், சிவாச்சாரியார்கள், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர் பாடி அருளிய மழைப்பதிகங்களை, மேகராக குறிஞ்சிப்பண்ணில் பாடினர். தொடர்ந்து, நவகலச பூஜை, பஞ்சாட்சர வேள்விகளும் நடந்தது. மேலும், ஏகாதசி ருத்ரஜெபம் 101 முறை வருணஜெபம் செய்யப்பட்டு, சிவயாகத்தில் வைத்து, 11.00 மணிக்கு பூர்ணாகுதி நடந்தது. தொடர்ந்து, மழைவேண்டி வருணஜெபம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !