உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி உண்டியல்: ஒரு நாளில் ரூ.3.36 கோடி வசூல்

திருப்பதி உண்டியல்: ஒரு நாளில் ரூ.3.36 கோடி வசூல்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் உண்டியல் காணிக்கையாக, 3.36 கோடி ரூபாய் வசூலானது, என்று தேவஸ்தான, "பரக்காமணி அதிகாரிகள் கூறியுள்ளனர். திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் திங்கள் கிழமை இரவு வரை, பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக அளித்த தொகையை எண்ணும் பணி நடந்தது. அதில், ஒரே நாளில், 3.36 கோடி ரூபாய் வசூலானது தெரிய வந்தது. "நடப்பு ஆண்டில் வசூலான காணிக்கையில், இது தான் அதிகமான தொகை என, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !