உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்பலத்தடையார் மடத்தில் 7ம் தேதி திருவாசக முற்றோதல்

அம்பலத்தடையார் மடத்தில் 7ம் தேதி திருவாசக முற்றோதல்

புதுச்சேரி: புதுச்சேரி அம்பலத்தடையார் மடத்தில், வரும் 7ம் தேதி திருவாசக முற்றோதல் விழா நடக்கிறது. அண்ணாமலையார் கிரிவலக்குழு தலைவர் ராமலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: மாணிக்கவாசகர் கூற, சிவபெருமான் எழுதிய திருவாசக ஓலைச்சுவடி, 3,500 ஆண்டுகளாக புதுச்சேரி அம்பலத்தாடையார் மடத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. பன்னிரண்டு திருமுறைகளில் எட்டாம் திருமுறையான திருவாசக நூல் இங்குள்ளது. புதுச்சேரிக்கு புகழ் சேர்க்கும் வகையிலும், சித்தர்கள் வாழும் புண்ணிய பூமியான புதுச்சேரியில் வரும் 7ம் தேதி, அம்பலத்தடையார் மட வீதியில் திருவாசக நூல் முற்றோதல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருக்கழுகுன்றம் தாமோதரன் அடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இவர், தமிழகம் முழுவதும் திருத்தளங்களில் இசையோடு கலந்த உரையாக, தொடர்ந்து 12 மணி நேரம் நிகழ்ச்சி நடத்தி, தமிழ்நாடு இந்து அறநிலையத்துறையின் பாராட்டை பெற்றுள்ளார். மேலும், காஞ்சி சங்கர மடத்திலிருந்து சைவ நெறியாளர் என்றும், திருவாடுதுறை ஆதினத்தால் "திருவாசக சித்தம் என புகழப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருவாசக நூல் முற்றோதல் விழாவில் முதல்வர் ரங்கசாமி, சிவஞான பாலய குரு மகா சன்னிதானம் சுவாமிகள், கனகசபை சுவாமிகள், கயிலைமாமணி சுந்தரராசு அடிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !