பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
சிவகங்கை: சிவகங்கை,பிள்ளைவயல் காளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா,நாளை காப்புக்கட்டுதலுடன் துவங்குகிறது. சிவகங்கை நகரில்,பிள்ளைவரம் தரும் பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் நாளை, காலை 9.15 முதல் 10.15மணிக்குள் 59ம் ஆண்டு பூச்சொரிதல் விழா, காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது. அன்று மாலை, 6 மணிக்கு சன்னதி முன், பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். தினமும் மாலை 5 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும். பூச்சொரிதல்: ஏழாம் நாளான, ஜூலை 12 அன்று காலை 10.30 - 12 மணிக்குள் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெறும். அன்று மாலை 4 மணிக்கு,சந்தனக்காப்பு அலங்காரத்தில், வீற்றிருக்கும் அம்மனுக்கு, பூச்சொரிதல் விழா நடைபெறும். அன்றைய தினம், நகரில் உள்ள பக்தர்கள் பூத்தட்டுக்களை ஏந்தி வந்து, அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்வர். பக்தர்கள் பொங்கல், மாவிளக்கு, பிள்ளை வரம் வேண்டி தொட்டில் கட்டுதல் போன்ற வேண்டுதல்களை நிறைவேற்றுவர். ஏற்பாடுகளை, நிர்வாக அலுவலர் ஆர்.இளையராஜா, பூமிநாதன் பூசாரி செய்து வருகின்றனர்.