லட்சுமி நரசிம்மர் கோவிலில் 7ம் தேதி தேரோட்டம்
ADDED :4521 days ago
பேரம்பாக்கம்: நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில், ஆனி பிரம்மோற்சவ விழாவில், 7ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. பேரம்பாக்கம் அடுத்த, நரசிங்கபுரத்தில் உள்ளது மரகதவல்லி தாயார் உடனுறை லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவில். இக்கோவிலில், ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு ஆனி பிரம்மோற்சவம் கடந்த, 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, 10:00 மணிக்கு உற்சவர் திருமஞ்சனமும், மாலை, 6:00 மணிக்கு பத்தி உலாத்தலும், ஆண்டாள் சன்னிதி மண்டபத்தில் ஊஞ்சல் சேவையும் நடைபெறும். தொடர்ந்து, 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா நாட்களில் உற்சவர் காலை, மாலை என, பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.