உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாதியில் நிறுத்தப்பட்ட கோயில் பணியால் பாதிப்பு

பாதியில் நிறுத்தப்பட்ட கோயில் பணியால் பாதிப்பு

போடி: போடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பாதியில் நிறுத்தப்பட்ட பணியால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.போடியில்,பழமைவாய்ந்த சுப்பிரமணியசுவாமி கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளதால், வாழ்க்கையில் மன அமைதி இல்லாதவர்களுக்கு சகல சவுபாக்கியத்தையும் தந்து சுப்பிரமணியர் அருள்பாலிப்பதாக ஐதீகம். இக்கோயிலின் புதுப்பிக்கப்பட்டு, இந்து அறநிலையத்துறை மூலம் கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.ஓராண்டாகியும், கோயில் வளர்ச்சிக்கான திருப்பணிகள் முடிவடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. கோயில் சுற்று வளாக தரை தளம் பெயர்ந்து கற்களாகவும், குண்டும் குழியுமாக உள்ளன. இதனால் கோயில் வளாகத்திற்குள் நடந்து சென்று சாமி தரிசனம் செய்ய முடியாத நிலையில் சிரமம் அடைந்து வருகின்றனர். கழிவுநீர் செல்வதற்காக அமைக்கப்பட்ட "பைப்லைன் உடைந்து பல மாதங்களாகியும் சீரமைக்கப்படவில்லை. இதனால் கழிவுநீர் தேக்கமாகி பல்வேறு வகையில் பக்தர்களுக்கு சுகாதார கேடு ஏற்படுத்துகிறது. பாதியிலே நிறுத்தப்பட்ட கோயில் வளர்ச்சிப்பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க திருப்பணிக்குழுவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !