கேதாரகவுரி கோவில் 10ல் கும்பாபிஷேகம்
ADDED :4554 days ago
ஈரோடு: பெருந்துறை தாலுகா, துடுப்பதியில், கேதாரகவுரியம்மன் கோவிலில், 10ம் தேதி, காலை, 9 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.இன்று காலை, கணபதி வழிபாடு, மஹாசங்கல்பம், புண்யாகம், பஞ்சகவ்யம், நவக்ரஹ ஹோமம், பூர்ணாஹூதி, பிரவேச பலி, வாஸ்து சாந்தி, காவிரி தீர்த்தத்துக்கு செல்லுதல், அங்குரார்ப்பணம் ஆகியவற்றுடன் முதல்கால பூஜை துவங்குகிறது.நாளை, இரண்டாம் கால பூஜையும். 10ம் தேதி காலை, மங்கல இசையுடன், மஹா கும்பாபிஷேகம், தசதானம், தசதரிசனம், மஹாஅபிஷேகம், மஹாதீபாராதனை நடக்கிறது.துடுப்பதி கேதாரகவுரியம்மன் அறக்கட்டளையினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.