உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோடீஸ்வர விநாயகர் கோயிலில் 6ம் ஆண்டு வருஷாபிஷேகம்

கோடீஸ்வர விநாயகர் கோயிலில் 6ம் ஆண்டு வருஷாபிஷேகம்

திருநெல்வேலி: நெல்லை கோடீஸ்வர விநாயகர் கோயிலில் 6ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது.நெல்லை கோடீஸ்வரன் நகர், கோடீஸ்வர விநாயகர் கோயிலில் 6ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, கும்பபூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. பன்னிரு திருமுறை ஆசிரியர் வள்ளிநாயகம் திருமுறை விண்ணப்பம் செய்தார். தொடர்ந்து காலை 11 மணிக்கு விமான கலசத்திற்கும், மூலஸ்தான விநாயகருக்கும் மகா அபிஷேகம் நடந்தது. மதியம் கோடீஸ்வரன் மணி தலைமையில் அன்னதானம் நடந்தது. மாலையில் சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. ஏற்பாடுகளை மகேஸ்வர மணி, ராஜேஷ் பட்டர், பக்தர் பேரவை தவைர் மீனாராம் பாலாஜி, செயலாளர் முருகேசன், பொருளாளர் தங்கராஜ், ‹ரியன், குரு உலகநாதன், பாலுப்பிள்ளை, மணிப்பிள்ளை, முத்துராஜ், ராதாகிருஷ்ணன் உட்பட பலர் செய்திருந்தனர். கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற சிறுவர், சிறுமிகளுக்கு ராஜதீபன் ஜூவல்லரி அதிபர் நடராஜன் பரிசுகளை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !