மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்
ADDED :4487 days ago
காரிமங்கலம்: காரிமங்கலம் அடுத்த பொம்மஅள்ளி பஞ்சாயத்து குட்டூர் கிராமத்தில் ஸ்ரீ வினாயகர், சின்ன மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா நாளை (ஜூலை 10) நடக்கிறது.இதையொட்டி, இன்று (ஜூலை 9) கணபதி ஹோமம், விநாயகர் பூஜை, முதல் கால யாகபூஜையும், மாலையில் இரண்டாம் கால யாகபூஜையும், அஷ்டபந்தன மருத்து சாத்துதல் நடக்கிறது. நாளை அதிகாலை மூன்றாம் கால யாகபூஜையும், 4.30 மணிக்கு மஹா கும்பாபிஷேகமும் நடக்கிறது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனையும் நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., அன்பழகன் உட்பட பலர் சிறப்ப அழைப்பாளராக கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.